Monday, 8 August 2011

முத்தான மூன்றாவது படைப்பு


என்னோட பதிவுகளை பார்த்த மக்கள் அம்புட்டு பேரும் புகழ்ந்து தள்ளிட்டாங்க.என்னோட முதல் பதிவை போட்டப்ப இருந்ததை விட ரெண்டாவது பதிவு போடும் போது தான் எனக்கு நண்பர்கள் அதிகமா இருந்தாங்க . ரெண்டாவது பதிவு பார்க்க வந்த மக்கள் என்னோட முதல் பதிவை பார்த்து ஆச்சர்யப்பட்டுட்டாங்க. முதல் பதிவே இவளவு அருமையா யாராலையும் எழுத முடியாது அதுவும் எந்த அனுபவமும் இல்லாம இப்புடி எழுத சான்ஸ் இல்லன்னு என்னை பாராட்டி மெயில் நெறையா வந்துச்சு .அதுலயும் சில பேர் எழுத்தாளர் சுஜாதா விட்டுட்டு போன இடத்தை உங்களால மட்டும் தான் நிரப்ப முடியும்னு கொஞ்சம் அதிகப்படியா பாராட்டி இருந்தாங்க.

இப்புடி என்னை பாராட்டி வந்த மெயில்கள் அத்தனைக்கும் பதில் அனுப்பிட்டு இருந்ததால் என்னால் இத்தனை நாளா பதிவு எதுவும் எழுத முடியல என்ற வருத்தமான விஷயத்தை தெரிவித்துக் கொள்கிறேன் . இந்த மூன்றாவது பதிவு முதல் பதிவு அளவுக்கு சுவாரசியமா இருக்குமா என்பது சந்தேகமே . இனிமே நான் எத்தனை பதிவு எழுதினாலும் அது என் முதல் பதிவுக்கு ஈடாகாது .என்னோட ரசிகர்கள் அனைவரும் ரொம்ப நாளா ரெண்டு பதிவுகளையே படிச்சு படிச்சு வெக்ஸ் ஆகிவிட்டதால் இதோ என்னுடைய மூன்றாவது பதிவு ....

L .K .G , U .K .Gல முன்னப்பின்ன படிச்சாலும் I Std   வந்தோன நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டேன் .அதுக்கு காரணம் I Stdல இருந்த மிஸ்  . கிளாஸ்ல யாரு அடிச்சாலும் மிஸ்ட்ட சொல்லாம அடுத்த நாள் வீட்ல இருந்து ஆள் கூட்டிட்டு வந்து அடிச்ச புள்ளைங்களுக்கு அடி வாங்கி கொடுப்பேன். இப்புடி அடி வாங்குன ஒரு பொண்ணு மிஸ்ட்ட மாட்டி விட்ருச்சு .உடனே மிஸ் என்னை பார்த்து ஒழுங்கா படிக்க வக்கு இல்லதா மக்கு .... நீ வீட்ல இருந்து ஆள் கூட்டிட்டு வந்து மெரட்டுரியானு கும்மு கும்ம்னு கும்மிட்டாங்க. ஏதோ அந்த வயசுல கொஞ்சம் ரோசம் வந்து நல்லா படிக்கணும்னு ஒரு வைராக்கியத்த மனசுல வச்சுக்கிட்டு நல்லா படிக்க ஆரம்பிச்சேன். அடுத்த Midtermலையே 2nd ரேங்க் வாங்கிட்டேன்.

இப்புடி ஒரு வழியா II Std போனேன் . I Stdல இருந்தத விட Maths கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. Maths மிஸ் வேற ரொம்ப கோவக்காரவுங்களா இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா பிக் அப் பண்ணிட்டு இருந்தேன்.இப்புடி II Stdல கால் வச்சு ரெண்டு மாசத்துல தான் என் வாழ்நாளில் மறக்க முடியாத அந்த சம்பவம் நடந்துச்சு.

அந்த மிஸ் எப்பவுமே ஒரு கணக்கை நடத்திட்டு அதே மாடல்ல  உள்ள கணக்கை கொடுத்து செய்ய சொல்லிட்டு போய் Chairல உட்கார்ந்து லைட்டா கண் அசருவாங்க. நாங்க பக்கத்தில் இருப்பவருடன் டிஸ்கஸ் பண்ணி கணக்கை போடுவோம் . நாங்க டிஸ்கஸ் பண்ணும் போது சத்தம் அதிகம் கேட்டா அந்த மிஸ் ஸ்கேல் எடுத்து  டேபுள்ள ரெண்டு தட்டு தட்டி ஏய்னு ஒரு சவுண்டு விடுவாங்க.

இப்புடி ஒரு நாள் மதிய நேரம் வழக்கம் போல எங்களை கணக்க போட சொல்லிட்டு போய் கண் அயர்ந்தாங்க மிஸ். ஒரு நாளும் இல்லாத திருநாளா அன்னக்கின்னு பார்த்து நான் முதல் ஆளா கணக்கை போட்டு முடுச்சுட்டேன்.சரி மிஸ்ட்ட கொண்டு போய் காட்டலாம்னு நோட்ட எடுத்துட்டு போனேன். மிஸ் மிஸ்னு நாலஞ்சு முறை கூப்பிட்டேன் . மிஸ் கண்ண மூடி அப்புடியே உட்கார்ந்து இருந்தாங்க. நாம முதல் ஆளா கணக்கை முடிச்ச நாள் அதுவுமா மிஸ் இப்புடி தூங்குராங்கலேன்னு எனக்கு கடுப்பா இருந்தது. ரொம்ப நேரமா கூப்பிட்டும் எழும்பாததால் ஒரு வித சந்தேகம் வந்துடுச்சு எனக்கு . அப்புறம் கிளாஸ்ல இருந்த எல்லாரும் கூப்பிட்டு பார்த்தோம் .

 எங்க மனசுல ஒரு வித பயம் வரவும் நான் போய் பக்கத்து கிளாஸ்ல இருக்குற மிஸ்சை கூட்டிட்டு வந்தேன்.அவுங்க மிஸ் பேர சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டே மிஸ் மேல கை வச்சாங்க தலை சொய்யுனு சாஞ்சுடுச்சு. அந்த மிஸ் வேகமா போய் ஹெச்.எம்ம கூட்டிட்டு வந்தாங்க. அவுங்க பல்ஸ் செக் பண்ணி பார்த்துட்டு அழ  ஆரம்பிச்சுடாங்க. அதை பார்த்த நாங்களும் என்னா நடக்குதுனே தெரியாம கோரஸா அழ  ஆரம்பிச்சுட்டோம் .எங்க எல்லாத்தையும் கிளாஸ  விட்டு வெளிய போக சொல்லிட்டு அவுங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க. அவுங்க heart attack வந்து இறந்துட்டதை அங்க confirm பண்ணிடாங்க . எங்களுக்கெல்லாம் கண்ணு முன்னால மிஸ் இறந்து போனது பயமாவும் கவலையாவும் இருந்துச்சு. 

நான் நல்லக் காலத்துலேயே பயங்கர தைரியசாலி இதை வேற பார்த்துட்டேன் அப்புறம் என்னா , காய்ச்சல் வந்து ஒரு வாரம் ஸ்கூல் சைடே போகல . நான் படுச்சது கிறிஸ்டியன் ஸ்கூல் என்பதால் பாதரை கூட்டிட்டு வந்து மாஸ் நடத்தி வேளாங்கன்னில இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கிளாஸ்ல  தெளிச்சு விட்டாங்க.அப்புறம் தான் அந்த கிளாஸ்குள்ள போனோம். இது மாதிரி அனுபவம் வேற யாருக்கும்  இருக்குமான்னு தெரியல எனக்கு. மனதுக்கு கஷ்டமான மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று ...

45 comments:

 1. இருங்க படிச்சிட்டு வாந்து சொல்றேன்

  ReplyDelete
 2. நீங்க போட்ட கணக்கக் கூட பாக்காம போய்ட்டாங்களே... :(

  ReplyDelete
 3. ஐயயோ!! இப்போ தான் ரெண்டாம் கிளாஸ் கதையே சொல்றீங்களா? இன்னும் காலேஜ் வரை உள்ள கதை எல்லாம் என்ன கர்ண கொடுறேமா இருக்க போதோ!!!

  ReplyDelete
 4. என்னது? நீங்க ரெண்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கீங்களா?அடேங்கப்பா. எஜூக்கேட்டட்ட் ஃபேமிலின்னு தெரியாம கமெண்ட்டிட்டேன் சாரி..

  ReplyDelete
 5. அநியாயமா டீச்சர கொன்னுட்டியே..

  ReplyDelete
 6. நீங்க ஏங்க அன்னைக்கு முதல் ஆளா கணக்க முடிச்சீங்க... அதான் டீச்சர்க்கு அட்டாக் வந்துருக்கு!!

  ReplyDelete
 7. டீச்சர ஆள் வெச்சி அடிக்க முடியலன்னு வேற கணக்க போட்டு இப்படி அநியாயமா கொன்னுபுட்டிங்களே ரேணு

  டீச்சர் குடுத்த சம் 1+1=. உங்களோட answer might be 1+1=1,75,000,000,000. அவங்க இத பார்த்துட்டு தான் செத்திருப்பங்கன்னு ஒரு டவுட்@RealRenu

  ReplyDelete
 8. கொலை வெறி பதிவு..மக்களே உஷார்

  ReplyDelete
 9. டேய்! யாருடா Blog ஐ கண்டுபுடிச்சவன்?

  ReplyDelete
 10. நல்லா பதிவு!
  Better U can disable ur Blog!
  தமிழ் கூறும் நல்லுரம் சார்பாக கோரிக்கை

  ReplyDelete
 11. நான்தான் அந்த செத்துப்போன டீச்சர். உன்னை பழி வாங்க தான் தேடிகிட்டு இருந்தேன். வசமா மாட்டி கிட்டயா.

  ReplyDelete
 12. //முத்தான மூன்றாவது படைப்பு//


  மொத்தாம விட்டது எங்க தப்பு...

  ReplyDelete
 13. விளையாட்டுக்கு சொல்லவில்லை. எதிர்பார்த்ததை விட நன்றாக எழுதியிருக்கிறீர்கள். 

  முக்கியமாய்ப் பாராட்ட நினைப்பது: எழுத்துப்பிழைகள் குறைவாக இருப்பதற்கு. (ட்விட்டரில் அத்தனை கொலை செய்வீர்கள்!)

  தொடர்ந்து எழுதுங்கள். இதுபோன்ற கிண்டலான தலைப்பையெல்லாம் தவிர்த்து. 

  ஆல் த பெஸ்ட்!

  ReplyDelete
 14. ஏ! அர லூசு குள்ளக்கத்திரிக்கா வேர்டு வெரிஃபிகேசன தூக்கித்தொலை! உனக்கு கமெண்ட்டு போடறதே பெருசு இதுல வெரிஃபிகேசன் ஒரு கேடு!

  ReplyDelete
 15. நல்லாதாங்க இருக்கு... :)

  ReplyDelete
 16. @ அகல்விளக்கு
  முதல் முதலா இந்த பதிவை படிக்க வந்ததற்கு நன்றி ... உங்கள் மனவலிமையை பாராட்டுறேன்

  ReplyDelete
 17. @Srini படிச்சுட்டு comment போடுறேன்னு போடாமையே போய்டீங்க

  ReplyDelete
 18. @Moorthy கண்டிப்பா நீங்க எதிர்பார்க்குற மாதிரி தான் இருக்கும்

  ReplyDelete
 19. @ C.P. Senthil yes I'm educated girl from educated family

  ReplyDelete
 20. @வேதாளம் அடப்பாவி எனக்கு கொலைகாரி பட்டம் கட்டிடியே

  ReplyDelete
 21. @Siva & @oru Nanban எனக்கும் அதே டவுட்டு தான்

  ReplyDelete
 22. @குழந்தபையன் & @Manion grrrrrrrr

  ReplyDelete
 23. @Vatsala நான் அவள் இல்லைங்கோ ....

  ReplyDelete
 24. எனக்கு இதுவும் வோனும் இன்னமும் வேனும்!!! இத்தோட சரி இனிமே பிளாக்கே படிக்கமாட்டேன் !!!

  ReplyDelete
 25. @பரிசல்காரன் Thank U Parisal ...ஆள் வச்சு correct பண்ணினேன் எழுத்துப்பிழைகளை .... உண்மையாவே இந்த தலைப்பு கிண்டலுக்காக வச்சது இல்ல ..... நீங்க அப்புடி நினைச்சா நான் sorry கேட்டுக்கிறேன்

  ReplyDelete
 26. சூப்பர் எழுத்து நடை அருமை . நல்ல நியாபக சக்தி .மென் மேலும் எழுத உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. @Hanif Rifay @Nathan @aaru @citybabu நன்றி !!!

  ReplyDelete
 28. @ராஜன் முழு லூசு ராஜன் அவர்களே நீக்கி விட்டேன் வேர்டு வெரிஃபிகேசன

  ReplyDelete
 29. ஆண்டு தேர்வு எழுதாம,ஒன்னாம் வகுப்பு மிட் டேர்ம்மில் இரண்டாம் ரேன்க் எடுத்து நேரா இரண்டாம் வகுப்பு போன மொத மாணவர் நீங்களாதான் இருப்பீங்க...

  ReplyDelete
 30. @bigilu நீங்க தமிழ் படம்லாம் பார்க்கிறது இல்லையா?

  ReplyDelete
 31. ௨௪௫௬௭௬௮(௭௬௫௫௪௩௫௬௫௮ளபழஉஇஇஅஏ னழ௫௪

  ReplyDelete
 32. இதுக்கு கமென்ட் வேற போடனுமா... கடவுளே

  ReplyDelete
 33. பதிவை விட உங்கள் அசாத்திய மன தைரியம்தான் நான் வியக்கும் ஒரு விஷயம்.. நன்றாக எழுதுபவர்களே பதிவிட பயப்ப்படும்போழுது இந்த முயற்சி அசரடிக்கும் ஒன்றுதான்..நல்ல முன்னேற்றம், பழைய பதிவுடன் ஒப்பிடும்போது..

  சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்..இன்னும் எழுதுங்க எல்லாம் சரியாப் போகும்..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 34. தலைப்பை முத்தான முதற்கொலைன்னு வச்சிருந்தா இன்னும் நல்லா பொருந்தியிருக்கும்..

  ReplyDelete
 35. ரேணு நல்ல பதிவு மேலும் காலதாமதமின்றி அடுத்த பதிவிடவும் !

  ReplyDelete
 36. நான் படுச்சது கிறிஸ்டியன் ஸ்கூல் என்பதால் பாதரை//

  அப்பாடா நம்மை போல தப்பு தப்பா சரியாய் எழுதி இருக்காங்க

  நாம மட்டும்தான் தப்பு தப்பை எழுதுறோம்னு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தேன்..now am happy..so happy..

  ReplyDelete
 37. நான் படுச்சது கிறிஸ்டியன் ஸ்கூல் என்பதால் பாதரை//

  அப்பாடா நம்மை போல தப்பு தப்பா சரியாய் எழுதி இருக்காங்க

  நாம மட்டும்தான் தப்பு tappaga எழுதுறோம்னு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தேன்..

  ReplyDelete
 38. நல்லா இருக்குங்க, முதல்ல சொல்லப்பட்ட உங்கள் எழுத்துலக அனுபவம் மெய்சிலிர்க்க வைத்தது.

  ஆசிரியை இறந்தது வருத்தமே :(

  ReplyDelete
 39. தெறமை நிறையா கீது!
  படிக்கும் போது போரடிக்கல!
  பாராட்டாம இருக்க முடியல!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 40. சுவாரசியமாத்தான் எழுதறீங்க..
  அடுத்தாப்ல கவித கிவித எதுனா எழுதுவீங்களொ..?
  இப்பவே சொல்லி புட்டா நல்லது
  சொக்ஸ்

  ReplyDelete
 41. உங்க கதைய விட உங்களுக்கு வந்த கமெண்ட்ஸ் படிக்கும் போதுதான் செம ஜாலியா இருக்கு...

  ReplyDelete
 42. அடங்கப்பா... இது பயங்கரமான நிகழ்வு... படு பயங்கரமான பதிவு..

  ReplyDelete