Wednesday 15 June 2011

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே !!!

 

ஏதோ ஒரு ஆசையில் blog  create பண்ணிட்டேன் . ஒரு ஹாய் சொல்லி பிள்ளையார் சுழியும் போட்டாச்சு. அத அப்புடியே விட்டுடலாம்னு பாத்தா என்னை நம்பி 3  followers . நம்ம நண்பர் சந்தோஷ்வேற ஊரே தம்பட்டம் அடிச்சிட்டார் நான் blog  create பண்ணி வெறும் ஹாய் போட்டு வச்சுருக்க விஷயத்தை . அந்த வகைல நெறைய மக்கள் என் ப்ளாக்க பார்க்க  ஒரே போட்டி .

சரி நம்மள நம்பி வர்ற மக்களை ஏமாத்த வேண்டாமேனு  ஏதாவது ஒரு கருமத்தை எழுதுவோம்னு முடிவுப்பண்ணி நேத்து நைட் உட்காந்தேன் .ஒரு கன்றாவியும் மூளைல தோணல. சரி எதுக்கும் மற்றவர்களுடைய ப்ளாக்க   வேடிக்கை பாத்துட்டு வரலாம்னு ஒவ்வொன்னா பார்க்க ஆரம்பிச்சேன் .அப்ப தான் தெரிஞ்சது நம்ம எவளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கோம்னு.  

 ஒவ்வொரு ஜாம்பவானும் பயங்கரமா எழுதி இருந்தாங்க . நாம அந்த அளவுக்கு வொர்த் இல்லையேன்னு ஒரு சின்ன நடுக்கம் மனசுல  வந்துடுச்சு .கவிதை கன்றாவி எல்லாம் நமக்கு வராதேனு ஒரு சின்ன பயம் .
  
இருந்தாலும் என்னை follow பண்ற 3  பேரை நெனச்சு பாத்தேன் .வெறும் ஹாய்கே    follow பண்ற அந்த நல்ல உள்ளங்களை ஏமாத்த கூடாதுன்னு நெனச்சேன் . சரி கடைசியா ஒரு ப்ளாக்க பாத்துட்டு போய் படுப்போம்னு குழந்த ப்ளாக்க பாத்தேன் .அப்ப தான் எனக்கு ஒரு நம்பிக்கையே வந்துச்சு .பயபுள்ள நம்பள மாதிரி தான் ஒன்னும் தெரியாமதான் ஆரம்பிச்சு இருக்கின்ற விவரம். (சும்மா சொன்னேன் உண்மையாவே நல்லா இருக்கும் ). அப்புறம் போய் டிவிய பாத்தேன் .இஸ்கூல் நாளைக்கு (இன்னைக்கு) ஆரம்பிக்கிறதா நியூஸ் போட்டாங்க. அப்ப தான்  எனக்கு முதல் முதலா நான் இஸ்கூல் போன ஞாபகம் வந்துடுச்சு .


ஒ.கே நம்ம அத பத்தியே   எழுதுவோம்னு நெனைச்சா    நள்ளிரவு 12  மணி ஆய்டுச்சு . சும்மாவே நம்ம பயந்த சுபாவம்  ,இதுல அப்ப தான் minimeens DPய பாத்தேன் .சரி  கெளம்புவோம்னு கெளம்பிட்டேன் படுக்க.  

இன்னைக்கு காலைல முதல் வேலையா உட்காந்து எழுத ஆரம்பிச்சுட்டேன் . இப்ப flash  backகு போவோம் . அப்புடியே ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த என்னைய கொண்டு போய் இஸ்கூல்ல சேத்தாங்க. நான் ஒரே அழுகை .அப்பா தான் இஸ்கூல்ல கொண்டு போய் விட வந்தார் .நான் விடாம அழுது முதல் நாளே அவர் கூடயே வீட்டுக்கு வந்துட்டேன். அம்மா வீட்ல வச்சு வெளு வெளுனு வெளுத்துட்டாங்க .

அப்புறம் அடுத்த நாள் மறுபடியும் கொண்டு போய் விட்டாங்க. முதல் நாள் விழுந்த அடி ஞாபகம் இருந்ததால் பேசாம , நம்ம விதி இது தான்னு நெனைச்சுக்கிட்டு இஸ்கூல்போயிட்டேன் .அங்க போனா எனக்கு மேல எல்லா பக்கிகளும் அழுதுக்கிட்டு இருக்குங்க . நானும் அதுங்க ஜோதில ஐக்கியம் ஆய்ட்டேன்.

ஒரு பத்து நாள் ஒண்ணுமே நடத்தல சரி சும்மா தானே வர்றோம்னு நானும் ஜாலியா வர ஆரம்பிச்சுட்டேன் .  அப்ப தான் விதி A , B , C , D  ரூபத்துல  வந்துச்சு .அதுக்கு அப்புறம் எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு .எவளவு கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணினாலும் மனப்பாடம் ஆகவில்லை .அதுல வேற ஆர்டர்ஆ எழுதலைன்னு மிஸ் ஒரு பிடி பிடுச்சுட்டாங்க .

என்னடா பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப தான் சிலேட்ட (slate) தொலைச்சுட்டேன்னு புதுசு வாங்க கூட்டிட்டு போனாங்க. அப்ப தான் நான் கவனிச்சேன் ஒரு சிலேட்ல A , B , C , D எழுதி இருந்தத (அப்பவே கிரிமினல் புத்தி ) . அப்பாக்கிட்ட அடம் பிடுச்சு அந்த சிலேட் வாங்கினேன் .

அதுக்கப்புறம் சும்மா மிஸ்யே ஆச்சர்யப்படற அளவுக்கு நடந்துக்கிட்டேன் .அப்ப தான் விதி மறுபடியும் என் வாழ்க்கைல விளையாட ஆரம்பிச்சு. மிஸ் ஒரு நாள் நோட் குடுத்து எழுத சொன்னாங்க .பெக்க பெக்கன்னு முழிக்க ஆரம்பிச்சுட்டேன் .அப்புறம் தான் அந்தஅம்மாக்கு வெவரமே புரிந்தது. செம்ம அடி விழுந்தது .அதுக்கு அப்புறம் அந்தம்மா எப்பவுமே என்னைய ஒரு கிரிமினல பாக்கிற மாதிரியே பாக்கும். நான் A , B , C , D  (& ,, ) கத்துக்கறதுக்குள்ள முழி பிதிங்கிடுச்சு. உண்மையாவே அந்த வயசுல அது ஒரு பெரிய கஷ்டமா இருந்தது . 

இது L .K .Gல நான் அனுபவித்த வேதனை  (:-(